தவெக அமைச்சரின் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் தனுஷ் நிகழ்ச்சி!
சென்னையில் நாளை நடைபெறும் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணியினர் மாநாட்டில் தனுஷ் பங்கேற்கிறார்.
தனுஷ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த மகளிர் 5000 பேர் பங்கேற்க உள்ளதாகவும், பங்கேற்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை நேரில் சந்திக்கும் நடிகர் தனுஷ், மகளிர் அமைப்பை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை OMR-ல் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு பரிசும், மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் ரசிகைகள் சந்திப்பு கூட்டத்துக்காக முதலில் அடையாறு, வடபழனி பகுதிகளில் இடம் பார்த்தோம். சரியாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதனால் OMRல் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் பார்த்திருக்கிறோம். அங்கேதான் நாளை இந்த ரசிகைகள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவிருக்கிறோம் என்றனர் தனுஷுக்கு நெருக்கமான சிலர். தனுஷின் ரசிகைகள் சந்திப்பு நடக்கவிருக்கும் தனியார் கல்லூரி தவெக அமைச்சர் ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது ஹைலைட்.