×

“காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு” டிஜிபி திரிபாதி உத்தரவு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் பலருக்கு தொற்று பரவி அவர்கள், பலியாகி வருகின்றனர். இதனால் இறந்த போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பங்களில்
 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் பலருக்கு தொற்று பரவி அவர்கள், பலியாகி வருகின்றனர். இதனால் இறந்த போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பங்களில் முதற்கட்டமாக 36 குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் காவலர்களுக்கு தொற்று உறுதியாவதால் சுழற்சி முறையில் 20% காவலர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.