×

``நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..''- டிஜிபி அதிரடி பேட்டி

 

 

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி -யாக பொறுப்பேற்றிருக்கும் மகேஷ்குமார் அகர்வால் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், "தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. முதல்வர் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றார்.