உடனே சஸ்பெண்ட்தான்! காவல்துறையினருக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் யாரேனும் போதைப்பொருள் உட்கொண்டு மரணித்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் என டிஜிபி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் யாரேனும் போதைப்பொருள் உட்கொண்டு மரணித்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார். மத்திய முகமைகள் போதை பொருளை பறிமுதல் செய்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மெத்தனப்போக்கு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல, மாவட்ட அளவில் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.