×

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

 

திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனத்திற்கு  பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் வரக்கூடிய பக்தர்களுக்கு 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ 300  சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஆறு மணி நேரமும், சர்வ தரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன.  பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். கூட்டத்தில் பக்தர்களுக்கு அவ்வப்போது தேவஸ்தானத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்  மூலம் 5 மொழிகளில் பக்தர்களுக்கு  அறிவிக்கப்படுகின்றன. கோடைக்காலக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு சாமி தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால்    தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கடுமையான வெப்பத்திலிருந்து பக்தர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பாட்ட கங்கெயம்மன் கோயில் சந்திப்பு   முதல் கோகர்பம் அணை வழியாக வெளிவட்டச் சாலை வரை நிழற் பந்தல்கள், தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வைகுண்டம் வரிசை வளாகம்-2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் நிழற்பந்தல்கள்  அமைக்கப்பட்டுள்ளன. வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்காக குளிங் பெயிண்ட் தரைகளில் அடிக்கப்பட்டு  கூடுதலாக தற்காலிகக் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  கோயில், லட்டு விற்பனையகங்கள் மற்றும் அதிக பக்தர்கள் கூடும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் நிழற் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.  
திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னபிரசாதத் துறையின் சார்பில் , ஸ்ரீவாரி சேவகர்களால் வரிசைகளில் உள்ள பக்தர்களுக்குத் தொடர்ந்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலையில் பால் உப்புமா, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், புளியோதரை, தக்காளி சாதம், மற்றும் இரவில் பால் உப்புமா  ஆகியவை பக்தர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திருமலையின் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில், ஸ்ரீவாரி சேவகர்கள்  சுகாதாரத் துறையின் உதவியுடன் நடமாடும் தண்ணீர் கேன்கள் மூலம் பக்தர்களுக்குக் குடிநீர் வழங்கி வருகின்றனர். வெளிவட்டச் சாலையில் உள்ள நெரிசலைக் கருத்தில் கொண்டு, வரிசைகளுக்குப் பின்னால் ஒரு நடமாடும் முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​திருமலையில் பக்தர்களுக்காக சுமார் 7,500 அறைகளும் ஐந்து யாத்ரீகர் தங்குமிட வளாகங்களும் உள்ளன. அறைகள் கிடைக்காத பக்தர்கள், திருமலையில் உள்ள ஐந்து யாத்திரிகள் சமுதாய கூடம் ( பி.ஏ.சி. ) ஆகிய இடங்களில் சுமார் ஒன்பதாயிரம் லாக்கர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன ஒட்டு மொத்தமாக திருமலையில் 60,000 பக்தர்கள் மட்டுமே  தங்க முடியும். என்பதால் பக்தர்கள் அழுத்தம் கொடுக்காமல் உள்ள வசதியை பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருமலையில் சாமிக்கு  தலை முடி சமர்பிக்க பக்தர்கள் எந்தச் சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க  கூடுதல் சவர தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு மெட்டையடிக்கப்படுகிறது.  கடந்த ஐந்து நாட்களில் 4,32,213 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  அதிகபட்ச எண்ணிக்கையாக சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஐந்து நாட்களில், திருமலையின் பல்வேறு பகுதிகளில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவுப் பொருட்கள், தேநீர், காபி, பால் மற்றும் மோர் வழங்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களில் 4,32,213 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தரிசன வரிசைகள், நாராயணகிரி ஷெட்ஸ் மற்றும் வைகுண்டம் வரிசை வளாகத்தில் உள்ள அறைகளை  தொடர்ந்து கண்காணித்து  பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல்  செயல்பட்டு வருவதாகவும் எனவே பக்தர்கள் பொறுமையாக காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.