பழனி மலை அடிவாரத்தில் மேற்கூரை விழுந்து பக்தர்கள் காயம்..!
Updated: May 1, 2026, 11:23 IST
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், பழனி கோயில் அருகே நேற்று (ஏப்ரல் 30) பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றால், தற்காலிக கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மழைக்காக ஒதுங்கியிருந்த தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 18 பக்தர்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இடும்பன்குளத்தில் புனித நீராடிவிட்டு மழைக்காக ஒதுங்கிய பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி