சித்திரை முழு நிலவு விழாவுக்கு கண்ணகி கோயிலில் திரண்ட பக்தர்கள்- இடி தாக்கியதால் நேர்ந்த சோகம்
தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் இடி தாக்கியதில் கேரளா போலீசார் மற்றும் கேரள பெண் இருவருக்கு கை எலும்பு முறிந்தது. மேலும் 8 பேர் இடி விழுந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றி பாறையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு திருவிழா இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விமர்சியாக இன்று ஒரு நாள் மட்டும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணகி அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவின் இறுதி நேரத்தில் கண்ணகி கோவில் வளாகப் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.
கோவில் அருகில் இடி விழுந்ததில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆயுதப்படை போலீசார் அன்சார் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி தூக்கி வீசப்பட்டதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கேரள மாநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் எட்டு பேர் இடி விழுந்த விழுந்து தூக்கி வீசப்பட்டது அதிர்வில் உடல் பலவீனம் ஏற்பட்டு கேரள மாநிலம் குமுளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய வானிலை மையம் இன்று கனமழை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.