×

பக்தர்கள் கடும் அவதி! மின்வெட்டால் டார்ச் லைட் வெளிச்சத்தில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

 
உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கோடை விடு முறை என்பதாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில் திருவண்ணாமலையில் நேற்று இரவு திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. கிரிவலப் பாதையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை இருளில் கிரிவலம் சென்றனர். மின் வெட்டு துண்டிப்பால் பக்தர்கள் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் கிரிவல பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மின் வெட்டு துண்டிப்பால் எதிரில் யார் வருவது செல்வது தெரியாமல் மக்கள் அச்சத்திலேயே கிரிவலம் சென்றனர்.