☰
×

பக்தர்களின் பாதுகாப்பு கருதி அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல தடை..!

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டைக்கு அருகில், திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சில தினங்களுக்கு முன்பு பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று பஞ்சலிங்க அருவியில் தொடர் மழையினால் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சூழ்ந்தது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது என வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.