வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வெள்ளியங்கிரி ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்தாண்டும் பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாத இறுதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலையேற்றத்தின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளியங்கிரி மலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் நேரங்களில் மலையேற்றத்தைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பக்தர்கள் காலை 9 மணி வரை மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு மட்டுமே மலையேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள நேரத்தில் மலையேற்றத்தைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயதுடைய நபர் ஒன்று 7வது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சுயநினைவின்றி இருந்தவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரின் விவரங்கள் தெரியாததால் ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.