☰
×

சபரிமலை தரிசன முன்பதிவில் கட்டுப்பாடு விதித்தது தேவசம் போர்டு

 

 

சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பலர் வராத நிலையில் தேவசம் போர்டு கட்டுப்பாடு விதித்துள்ளது.

சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பலர் வராத நிலையில் தேவசம் போர்டு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். டிராவல் ஏஜென்சிகள் மொத்தமாக முன்பதிவு செய்து முறைகேடு செய்தவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்துவிட்டு செல்லாதவர்கள் இந்த மண்டல பூஜை காலத்தில் மீண்டும் செல்ல முடியாது. முன்பதிவு செய்த தேதியில் செல்ல முடியவில்லை என்றால் முன்கூட்டியே தேதியை மாற்றவும், ரத்து செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.