×

மகளிர் உரிமைத்தொகையை வைத்து அரசியல் செய்தவர்கள் பெருத்த ஏமாற்றம்- துணை சபாநாயகர்

 

மகளிர் உரிமைத் தொகை வைத்து அரசியல் செய்து வந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, கொரோனா காரணமாக ஏற்பட்ட இன்னல்கள், வரலாறு காணாத பண வீக்கம், கடுமையான நிதி நெருக்கடி, பெரு வெள்ளம் என பல சவால்களை எதிர்கொண்டு நிதி பற்றாக்குறையை 3 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்பட்டது திறமை மிக்க நிதி மேலாண்மைக்கும், தலைமை பண்பிற்கும் கிடைத்த வெற்றி என கூறினார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் ஒருசேர பாராட்டி வருவதாகவும், மகளிர் உரிமைத்தொகை வைத்து அரசியல் செய்தவர்கள் ஏமாற்றை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளுக்கும் சென்ற ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகளை விட அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பொருளாதாரத்தில் தமிழகம் மேலும் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தார்.