×

ரூ.27,000 லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் கைது

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் பெரும்பாலான அலுவலகங்களில் உதவியாளர்கள் தான் பொறுப்பு சார் பதிவாளராக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தஞ்சாவூர் மண்டலம் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் உதவியாளர்கள், பொறுப்பு சார்பதிவாளர்களாக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கு கிறார்கள். இஷ்டம் போல் ஆட்களை நியமித்துள்ளனர். 

பட்டுக்கோட்டை ஜாயிண்ட் 1 ஜாயிண்ட் 2, பேராவூரணி, மதுக்கூர் அதிராம்பட்டினம், திருவோணம், கீரமங்கலம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, சுப்பிரமணியபுரம், இரண்டாம் புலிக்காடு, ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்கள் தான் பொறுப்பு சார்பதிவாளராக  பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் பத்திர பதிவு நடைபெறும். இல்லையெனில் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி பத்திரங்களை நிலுவையில் வைப்பார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.