×

எதிர்க்கட்சி துணைத் தலைவர் - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

 

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம்;3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள்  செய்யவில்லை. துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம்  என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அத்துடன் இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
 

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர், துணைச் செயலாளராக அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன; இருக்கை மாற்றம் தொடர்பாக இதுவரை சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.