பிளஸ்-2 தேர்வில் தோல்வி- மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஆரணியில் பிளஸ்-2 தேர்வில் பெயிலானதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தச்சூர் சாலை தாண்டவராயன் தெருவை சேர்ந்த மேஸ்திரி சுரேஷ்- கமலா தம்பதி. இவர்களுக்கு கணேஷ் என்ற மகனும், வினோதினி என்ற மகளும் உள்ளனர்.மேலும் வினோதினி ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் குருப்பில் படித்து இந்த வருடம் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 ரிசல்ட் வெளியானது. இதில் வினோதினி இயற்பியல் தாவரவியல் 2 பாடப்பிரிவில் தோல்வியடைந்துள்ளார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மனமுடைந்த வினோதினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அண்ணன் கணேஷ் வீட்டில் வந்து பார்த்த போது வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் வினோதினி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.