×


அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை!!

 

அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை கொண்டு  வரப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.  ஜூலை மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசும்போது சென்னையில் தற்போது 16 இடங்களில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.