"அன்று மறுப்பு... இன்று அழைப்பிதழ்!" – கோலிவுட்டை கலக்கும் அனிருத் – காவ்யா மாறன் கல்யாண செய்தி!
அனிருத்தும் காவ்யாவும் காதலித்து வருவதாகவும் , விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அப்போது அனிருத் தனது X தளத்தில் “திருமணமா? ஹாஹா... நண்பர்களே! அமைதியாக இருங்கள், தயவுசெய்து வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று எழுதினார்.
இந்நிலையில் , சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நவம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக கலாநிதி மாறனும், அவரது மனைவி காவேரி மாறனும் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ரேவந்த் ரெட்டியிடம் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran. The wedding reception of Kavya Maran and Anirudh Ravichander is scheduled to be held in Chennai on November 21. #KalanithiMaran #KavyaMaran
— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026