×

மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுப்பு!

 

மழைநீர் வெள்ளம் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பெய்த கனமழையால் சென்னை பெருநகர போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வெள்ளப்பெருக்கு காரணமாக ஆர்பிஐ சுரங்கப்பாதை , மெட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது.  அதேபோல் கேகே நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் சிவசாமி சாலை, ஈசிஆர் சாலை, அண்ணா ரோட்டரி சர்வீஸ் சாலை, கேபி தாசன் சாலை, டிடிகே 1வது குறுக்கு சந்து, ராஜரத்தினம் மைதானம் ,திருமலைப்பிள்ளை சாலை, பிரகாசம் சாலை ,விநாயகபுரம் சந்திப்பு, பத்மநாபா சந்திப்பு, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.

அத்துடன் பெருநகர சென்னை பெருநகரில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி உள்ள சுரங்கப் பாதை மற்றும் சாலைகளில் மழை நீர் மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அதிகப்படியான மழை நீர் சூழ்ந்து உள்ளதால் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லும் பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். கடற்கரையில் உள்ள மணல் பரப்பு கனமழையின் காரணமாக முழுவதும் நீர் பரப்பாக  மாறிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு,  சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.