பங்குனி உத்திரத் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பதா? தமிழக அரசிற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்..!
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை;
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும்.இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது.ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்,
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.