×

டெல்லி மாணவர்கள் ஏமாற்றம்..! திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்காமல் சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்..!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10 -ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த நிலையில் அவர், இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார்..விஜய் முதலமைச்சரான பின் முதல்முறையாக டெல்லி செல்வதால் அவரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய விவசாயத்துறை அமைச்சர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது.வழக்கமாக மாநில முதல்வர்களை 40 நிமிடம் சந்தித்து பேசும் பிரதமர் மோடி விஜயிடம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.அதன் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து சிறிது நேரம் பேசினார் விஜய்..

அதேநேரம் மத்திய அமைச்சர் அமிஷாவை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கிருந்து சாதகமான பதில் வரவில்லை.  

டெல்லி பயணத்தின்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கும் முதலமைச்சர் விஜய் செல்ல உள்ளார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார் என கூறப்பட்டது.விஜயை பார்ப்பதற்காக தமிழக மாணவர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் விஜய் அங்கு செல்லாமலேயே சென்னை திரும்பி விட்டார். இது மாணவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது..