×

‘தெய்வத்துள் தெய்வம்’… உங்கள் TTN BAKTHI யூடியூப் சேனலில்!

நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற நாடகமாக அரங்கேற்றியது. மஹா பெரியவாளின் வரலாற்று மேடை நாடகம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 29 முறை மேடை ஏறியுள்ளது. இந்த நாடகத்தை நேரில் பார்க்கமுடியாதவர்களுக்காக முதன்முறையாக காட்சி ஊடக வடிவில் நமது TTN BAKTHI யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 8 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு
 

நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற நாடகமாக அரங்கேற்றியது. மஹா பெரியவாளின் வரலாற்று மேடை நாடகம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 29 முறை மேடை ஏறியுள்ளது. இந்த நாடகத்தை நேரில் பார்க்கமுடியாதவர்களுக்காக முதன்முறையாக காட்சி ஊடக வடிவில் நமது TTN BAKTHI யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 8 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றிய சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், 1894ஆம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்தவர். 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதிவரை 87 ஆண்டுகள் இறைப்பணி செய்திருக்கிறார். நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்த இவரது வாழ்க்கை வரலாறே ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற பெயரில் காட்சி வடிவில் நம் வீடு தேடி வருகிறது. வரும் வாரங்களில் யூடியூபில் கண்டுகளிப்போம்… இணைந்திருங்கள் TTN BAKTHI உடன்…

டாப் தமிழ் நியூஸ் குழுமத்தின் ஆன்மீக யூடியூப் சேனலான TTN BAKTHI- இல் இந்நாடகத்தை காட்சிப்படுத்துவதையொட்டி, எங்கள் நிறுவனரும், எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவன இயக்குநர்களும் காஞ்சி பெரியவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இன்று சந்தித்து ஆசிப்பெற்றனர்