×

“தெய்வத்துள் தெய்வம்” மஹா பெரியவாளின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாறு!

நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவாளின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற நாடகமாக அரங்கேற்றியது. மஹா பெரியவாளின் வரலாற்று மேடை நாடகம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 29 முறை மேடை ஏறியுள்ளது. இந்த நாடகத்தை நேரில் பார்க்கமுடியாதவர்களுக்காக முதன்முறையாக காட்சி ஊடக வடிவில் நமது TTN BAKTHI யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. நாளை முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. காஞ்சி காமகோடி
 

நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவாளின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற நாடகமாக அரங்கேற்றியது. மஹா பெரியவாளின் வரலாற்று மேடை நாடகம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 29 முறை மேடை ஏறியுள்ளது. இந்த நாடகத்தை நேரில் பார்க்கமுடியாதவர்களுக்காக முதன்முறையாக காட்சி ஊடக வடிவில் நமது TTN BAKTHI யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. நாளை முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றிய சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், 1894ஆம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்தவர். 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதிவரை 87 ஆண்டுகள் இறைப்பணி செய்திருக்கிறார்.

நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்த இவரது வாழ்க்கை வரலாறே ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற பெயரில் காட்சி வடிவில் நாளை மாலை நம் வீடு தேடி வருகிறது. வரும் வாரங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘தெய்வத்துள் தெய்வம்’ நிகழ்ச்சியை காண TTN BAKTHI யூடியூப் சேனலுடன் இணைந்திருங்கள்!