×

அவசரநிலை பிரகடனம்..! இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

 
மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 6E 762 விமானத்திற்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததாகக் கூறப்பட்டதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் டெல்லி விமானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.