×

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு - தினகரன் பேட்டி 

 

ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் அமமுக போட்டியிடுவது பற்றி 27 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது . திமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் .27ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். 

ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.  இரட்டை இலை சின்னம் இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது என்றார்.