☰
×

தீபத்தூணில் 10 பேர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடிவு..!

 

நவ., 24ல் திருக்கார்த்திகையன்று தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. இது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அறங்காவலர்கள் குழு கலைக்கப்பட்டு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் கோவில் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவிட்டது.தொடர்ந்து, டில்லியில் இருந்து பார்த்திபன் சென்னை வந்தார். நாளை (நவ.28) இரு நீதிபதிகளும் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை வருகின்றனர்.

உடனடியாக கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மாலையில் தீபம் ஏற்றுவது குறித்து, பட்டர்கள், கோவில் நிர்வாகத்துடன் ஆலோசிக்கின்றனர். அதை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஆர்.பி.எப்., வீரர்களுடன் ஆலோசித்து, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளனர்.

பின்னர், மலைக்கு செல்லும் பாதையில் ஆய்வு செய்கின்றனர். மாலையில் யார், யார் தீபம் ஏற்ற வேண்டும் என இறுதி செய்ய ஹிந்து அமைப்பினர்கள், உள்ளூர்காரர்கள், பட்டர்களுடன் ஆலோசிக்கின்றனர்.10 பேர் வரை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், கடந்தாண்டு தீபம் ஏற்றப்படாததை கண்டித்து உயிர் தியாகம் செய்த பூர்ணசந்திரன் மற்றும் 1990ம் ஆண்டு தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்திய, மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராஜகோபால் குடும்பத்தினரில் இருந்து யாராவது ஒருவர் கட்டாயம் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் ஹிந்து அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதன்படி, 10 பேர் வரை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படலாம்.