×

டிசம்பர் 31 தான் கடைசி நாள்.. இதை பண்ண மறக்காதீங்க..! 

 

 ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் விரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என மத்திய அரசு அண்மையில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.இதற்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவித்து இருந்தது. எனவே, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.  இதில் சுமார் 98.45 லட்சம் முன்னுரிமை கார்டுகளில், 3 கோடி உறுப்பினர்களும், 8.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.  

இவர்கள் மத்திய அரசின் தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இலசமாக பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் நீக்காமல் உள்ளனர். எனவே, பிஎச்எச் மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள உறுப்பினர்களி விவரங்களை சரிபார்க்க, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு கட்டாயம் என மத்திய அரசு கூறியது.

அதன் அடிப்படையில் தான், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, விரல் ரேகை பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கான பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, ரேஷன் கார்டில் விரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்.  ரேஷன் கடைகளில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் மெஷின் வழியாகவே ரேஷன் கார்டு உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றாலும், உங்களது ரேஷன் கார்டு செய்யப்படாது. இருந்தாலும் நீங்கள் விரல் ரேகை பதிவு செய்வது அவசியம். மேலும், இதற்காக எந்த ஒரு தேதியும் நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.