அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு
Jun 25, 2026, 16:04 IST
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே அமோனியா வாயு கசிவு குறித்த இடைக்கால விசாரணை அறிக்கை முதலமைச்சர் விஜயிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழுவினர் முழு விசாரணை அறிக்கையை இன்று விஜயிடம் சமர்பித்தனர். விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.