தவெக பிரசாரத்திற்கு தடைகோரியவருக்கு கொலை மிரட்டல்
Oct 1, 2025, 18:33 IST
தவெக பிரசாரத்திற்கு தடைகோரியவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடந்த நான்கு நாட்களாக கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு தடைகோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் கதிரேசனுக்கு, பூதக்குடியைச் சேர்ந்த தவெக நிர்வாகி வினோத் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. வழக்கை வாபஸ் பெற கோரி மிரட்டிய நிலையில்
தவெக நிர்வாகி வினோத் மீது அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார்.