பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மன்னிக்கவே முடியாத அலட்சியம்: சு.வெங்கடேசன்!
Jul 9, 2025, 07:45 IST
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ஜூலை 8 காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி என மூவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 3 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. மன்னிக்கவே முடியாத அலட்சியத்தால் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.