அன்பு சகோதரரே... நடிகர் அஜித் குமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்..!
நடிகர் அஜித் தயார் காலமான நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அன்புச் சகோதரர் அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 30, 2026
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான…