×

அன்பான சகோதரர் அஜித்... முதல்வர் விஜய்யின் ஸ்பெஷல் கிஃப்ட்!

 

பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள, 'சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸ்' மைதானத்தில், நடிகர் அஜித் பங்கேற்ற, 'லீ மேன்ஸ்' கோப்பைக்கான கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, நடிகர் அஜித்தும், முதல்வர் விஜயும் ஒருவரையொருவர் ஆரத்தழுவினர். இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், விஜய் - அஜித் சந்திப்பின் போது, இருவரும் பரஸ்பரம் கிப்ட் கொடுத்து தங்கள் அன்பினை பகிர்ந்து கொண்டனர். முதல்வர் விஜய், அஜித்துக்கு, ரேஸிங் கார் மினியேச்சரை பரிசளித்தார். அதில் தன் கைப்பட, அன்பான சகோதரர் அஜித் என குறிப்பிட்டு, பிரிமுடன் விஜய் என கையெழுத்திட்டுள்ளார்.

இதேபோல், அஜித்தும், ஹெல்மெட் ஒன்றை விஜய்க்கு பரிசளித்துள்ளார்.