தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
Oct 10, 2026, 11:57 IST
மகாளய அமாவாசையான இன்று அதிகாலை முதலே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குறிப்பாக, வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டு, ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல், வண்ணாரப்பேட்டை பேராச்சியம்மன் கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.