×

“அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது” : ஸ்ருதி – அக்ஷரா அறிக்கை!

அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று கமல் ஹாசனின் மகள்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே விஜய் டிவியில ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரப்புரை, பிக் பாஸ் நிகழ்ச்சி என் பரபரப்பாக இயங்கி வந்த கமல் ஹாசனுக்கு காலில் கடுமையான வலி
 

அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று கமல் ஹாசனின் மகள்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே விஜய் டிவியில ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரப்புரை, பிக் பாஸ் நிகழ்ச்சி என் பரபரப்பாக இயங்கி வந்த கமல் ஹாசனுக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காலில்‌ ஒரு சிறு அறுவைச்‌ சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்‌. சில நாட்கள்‌ ஓய்வுக்குப்‌ பின்‌ மீண்டும்‌ என்‌ பணிகளை தொடர்வேன் என பிக் பாஸ் இறுதி போட்டியிலும், அறிக்கை வாயிலாகவும் கமல் ஹாசன் தெரிவித்தார்.

இந்நிலையில் கமல் ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.மூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள், நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அவர் மக்களை சந்திப்பார்; மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.