☰
×

#BREAKING சென்னைக்கு புயல் எச்சரிக்கை!

 

புயல் முன்னெச்சரிக்கையாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். மிக தீவிர புயலாக வலுவடைந்து அக். 28ல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையும். ஆந்திராவின் பாபட்லா - விசாகபட்டினம் இடையே மிக தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதலே லேசான மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் அடுத்தக்கட்டமாக வானிலை மாற்றத்தைப் பொறுத்து 3 அல்லது 5-ஆம் கட்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (அக்.25) காலை 7 மணி நிலவரப்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.