☰
×

ஆந்திராவை அச்சுறுத்தும் முரசு புயல்..!! சென்னை-ஆந்திரா இடையே 11 விமான சேவைகள் ரத்து..!!

 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள “முரசு” புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு 11.30 மணி முதல் நவம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில், ஆந்திர மாநிலம் நெல்லுார் - நரசப்பூர் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் ஆந்திராவுக்கு புறப்பட்டுள்ளது.

முரசு புயல் எதிரொலியாக சென்னை-ஆந்திரா இடையே 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மோசமான வானிலை காரணமாக, புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது