☰
×

வங்கக்கடலில் உருவானது ‘முரசு’ புயல்!

 

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  நவம்பர் 2-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நெல்லூர்- நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தென்மேற்கு, மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. 

முரசு புயலின் தாக்கம் தமிழகத்தை விட ஆந்திராவில்தான் அதிகமாக இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூரில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - நரசாபூர் இடையே முரசு புயல் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.