×

சி.வி.சண்முகம் தரப்புக்கு பின்னடைவு..!! அமைச்சரவையில் அ.தி.மு.க அணி இடம்பெறாது: திருமாவளவன்..!

 

தமிழக அமைச்சரவையில் விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில், த.வெ.க-விற்கு ஆதரவளிக்கும் அதிமுக-வின் ஒரு பகுதி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அ.தி.மு.க அதிருப்தியாளர்கள் அமைச்சரவையில் இணைவதாகக் கூறப்படும் இந்தச் சூழ்நிலையில், இடதுசாரி தலைவர்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், தமிழக அமைச்சரவையில் அ.தி.மு.க-வினர் யாரேனும் இடம்பெற்றால், த.வெ.க அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற எங்களது தற்போதைய முடிவை நாங்கள் நிச்சயம் மறுபரிசீலனை செய்வோம் என்று எச்சரித்துள்ளனர்.

 இந்நிலையில் அமைச்சரவையில் அ.தி.மு.க அணி இடம்பெறாது என த.வெ.க தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார். விஜய் அமைச்சரவையில் இடம்பெற துடித்துக் கொண்டிருந்த வேலுமணி, சண்முகம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தி அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் பதவி தர கம்யூ., விசிக கடும் எதிர்ப்பால் தவெக பின்வாங்கியது. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், லீமா ரோஸ் உள்பட 8 பேர் அமைச்சர் பதவி எதிர்பார்ததனர்.