×

“20 ஆண்டு காலத்தில் இப்படி ஒரு சபாநாயகரைப் பார்த்ததில்லை”- புகழ்ந்து தள்ளிய சி.வி.சண்முகம்

 

எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தில் தான் கடைசி வரை இருக்க வேண்டும் என அவர் நினைத்தார் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை  சி.வி.சண்முகம் புகழ்ந்து கூறினார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய சி.வி.சண்முகம், “2006-11 ஆட்சி காலத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது 3 முறை தான் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தற்போதைய கூட்டத்தொடரில் நான் எத்தனை முறை பேசினேன் என எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு தொகுதியில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் பேசிவிட்டேன். இனி புதிதாக ஏதாவது பிரச்சனை வந்தால் தான் பேசனும். அந்த அளவுக்கு சபாநாயகர் எனக்கு பேச வாய்ப்பு அளித்தார். என் தொகுதியில் இருக்கும் எல்லா பிரச்னைகளையும் பேசிவிட்டேன். இனி புதிதாகப் பிரச்னை வந்தால் மட்டும்தான் பேச வேண்டும். அந்த அளவிற்கு எனக்கு வாய்ப்பளித்தீர்கள். 20 ஆண்டு காலத்தில் இப்படி ஒரு சபாநாயகரைப் பார்த்ததில்லை. நீங்கள் வித்தியாசமானவர்.

எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தில் தான் கடைசி வரை இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால் இறைவன் வேறு நினைத்தான். இந்த அவையை அவர் தான் நடத்த வேண்டும் என இறைவன் நினைத்ததால், இன்று சபாநாயகராக அமர்ந்திருக்கிறார். இனிப்பா சபையை நடத்துற மாறி இனிப்போடதான் வருவார்.. கையில எப்போவும் சாக்லேட், பிஸ்கட் இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயமாக எடுக்கப்படவேண்டும் அப்போது தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கும்” என்றார்.