எனக்கு நயன்தாரா வேணும்.. என் கனவ முதல்வர் நிறைவேத்துவாரா?- சி.வி.சண்முகம்
Updated: Mar 17, 2026, 16:31 IST
தமிழக முதல்வர் கனவை சொல்லுங்கள் என்கிறார் எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும் கொடுப்பாரா? என்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கு சீர்கோட்டை கண்டித்தும் பாலியல் வன்கொடுமைமைகளை கட்டுப்படுத்தக்கோரி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ச்சுனன் பாமக எம்எல்ஏ சிவக்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்பட்டத்தில் சட்ட ஒழுங்கை கட்டுபடுத்த கோரி முழக்கமிட்டனர்.