சிவி சண்முகம்- எஸ்பி வேலுமணி மீண்டும் ஆலோசனை
அ.தி.மு.கவில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
அ.தி.மு.கவில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் தனியாக செயல்பட்டுவந்தவர்கள் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் வழங்கியிருந்தனர். வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை வேண்டாம் என சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் அனுப்பினார். இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை என கடந்த வாரம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்திருந்தார். தகுதி நீக்க நடவடிக்கை இனி எடுக்க முடியாது எனும் சூழலில் அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்று கூடு ஆலோசனை செய்துவருகின்றனர்.சி.வி.சண்முகம் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் பங்கேற்றுள்ளனர்.