அதிமுகவை பிடித்திருந்த சனி ஒழிந்துவிட்டது - சி.வி.சண்முகம்
Updated: Feb 27, 2026, 16:28 IST
அதிமுகவை பிடித்திருந்த சனி ஒழிந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியை விட மோசமானவர் ஓபிஎஸ். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே இரவோடு இரவாக பதவியேற்றார் ஓபிஎஸ். பதவி கொடுத்தால் நண்பர்கள், கொடுக்கவில்லை என்றால் துரோகிகள் என கூறுபவர் ஓபிஎஸ். எதிரியை விட துரோகிதான் மிக மிக ஆபத்தானவர். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுகவோடு இணைந்து சதி செய்தவர் ஓபிஎஸ். அதிமுகவினருக்கு இன்றுதான் பொங்கல், தீபாவளி. அதிமுகவை பிடித்திருந்த சனி ஒழிந்துவிட்டது. அதிமுகவை அழிக்க முயன்ற எதிரிகளுக்கு துணை போனவர் ஓபிஎஸ். அம்மாவின் ஆன்மா ஓபிஎஸ்ஸை மன்னிக்காது” என்றார்.