×

சாலையில் நடந்து சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு- 5 பேர் கைது

கோவை ஆலந்துறை அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தன்னாசி மகன் கருப்பசாமி (27). கூலி வேலை செய்து வரும் இவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கிட்டுச்சாமி என்பவர் எதற்காக அடிக்கடி நடந்து செல்கிறாய் என கருப்பசாமியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு கைகலப்பாகி
 

கோவை ஆலந்துறை அருகே சாலையில் நடந்து சென்ற இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

shadow man with knife on red background

கோவை ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதியை சேர்ந்தவர் தன்னாசி மகன் கருப்பசாமி (27). கூலி வேலை செய்து வரும் இவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கிட்டுச்சாமி என்பவர் எதற்காக அடிக்கடி நடந்து செல்கிறாய் என கருப்பசாமியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு கைகலப்பாகி உள்ளது.

இதையடுத்து இரவு கிட்டுசாமியின் மகன் உதயகுமார் கருப்புசாமியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது தாயாரை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இரவு மீண்டும் கருப்பசாமி மற்றும் அவரது உறவினர் சுஜித்குமார் இரண்டு பேரும் வீட்டின் அருகே நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது சாலை அருகே இருந்த உதயகுமார், மற்றும் அவரது நண்பர்கள் திடீரென கருப்புசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியுள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த உதயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்புசாமியை வெட்டியுள்ளார். மேலும் சூர்யா என்பவர் சுஜித்குமாரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தால், உதயகுமார் உள்ளிட்ட 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கருப்புசாமியின் தந்தை தன்னாசி கொடுத்த புகார் அடிப்படையில் ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டுசாமி, சூர்யா, உதயகுமார், அய்யாசாமி, பிரசாத் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.