×

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்!

தமிழகத்தில் இதுவரை ஊரடங்கு மீறலில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.22.01 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த பேரிடர் காலத்திலும் சிலர் ஊரடங்கை அலட்சியப்படுத்தி வெளியில் சுற்றி திரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.22.01
 

தமிழகத்தில் இதுவரை ஊரடங்கு மீறலில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.22.01 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த பேரிடர் காலத்திலும் சிலர் ஊரடங்கை அலட்சியப்படுத்தி வெளியில் சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.22.01 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறிய 6,94,928 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 9,99,837 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 9,02,249 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.