×

முழு ஊரடங்கில் தளர்வுகள்? முதல்வர் ஆலோசனை!

தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி முதல் வருகின்ற 7ம் தேதி வரை மீண்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மக்களின் தேவையை அறிந்த தமிழக அரசு காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதேசமயம் முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில்
 

தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி முதல் வருகின்ற 7ம் தேதி வரை மீண்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இருப்பினும் மக்களின் தேவையை அறிந்த தமிழக அரசு காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதேசமயம் முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். என்னென்ன மாதிரியான விஷயங்களில் தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் ஸ்டாலின் அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.