×

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடலூர் : நெற்பயிர்கள் நாசம் ; கவலையில் மக்கள்!

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் சுவடே இன்னும் மறையாத நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகி கரையை கடந்து உள்ள புரெவி புயலால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தொடர் கனமழையால் தற்போது கடலூர் மாவட்டமே ஏரி போல் காட்சி
 

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் சுவடே இன்னும் மறையாத நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகி கரையை கடந்து உள்ள புரெவி புயலால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தொடர் கனமழையால் தற்போது கடலூர் மாவட்டமே ஏரி போல் காட்சி அளிக்கிறது.

குறிப்பாக தொடர் மழையினால் கோவில் குளங்கள் நிரம்பி வருகிறது. பாடலீஸ்வரர் ,திருவந்திபுரம் ,தேவநாதசுவாமி ,புதுப்பாளையம் ,ராஜகோபாலசுவாமி ,விருத்தாச்சலம் உள்ளிட்ட சுமார் 85 கோவில் குளங்கள் நிரம்பி வழிகின்றன. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்து 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அத்துடன் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 10ற்கும் மேற்பட்ட தரை பாலங்கள் நீரில் மூழ்கின.

அத்துடன் கடலூரில் ஒரு லட்சத்திற்கும் அதிக ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஏரிகள் அனைத்தும் முழு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.