×

சபரிமலையில் கடலூர் பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

 

18-ம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடலூரை சேர்ந்த சுந்தர் (66) என்ற பக்தர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். 18 ஆம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே செல்லும்போது முதியவர் சுந்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். சபரிமலையில் மாரடைப்பு, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 17 பேர் உயிரிழந்தார்.