“தவெக தலைவர் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம்”- நிர்மல் குமார்
Updated: Mar 2, 2026, 17:20 IST
தவெக தலைவர் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார், “காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் அதிகபட்சம் 25 தொகுதிகளைகூட தாண்ட முடியாது. இதுதான் இன்றைய களநிலவரம். தவெக தலைவர் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம். காங்கிரஸ் தமிழக மக்கள் விரும்பும் ஒரு கட்சி. தமிழக மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு கட்சி. காங்கிரஸ்காரர்கள் கேட்பது மரியாதைதான். தவெக மீது உள்ள அச்சத்தின் காரணமாக தான் தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கூட்டணிக்கு அழைத்துள்ளது திமுக” என்றார்.