×

குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரா?- நிர்மல்குமார் விளக்கம்

 

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜரான நிலையில் தவெக நிர்வாகி நிர்மல்குமார் டெல்லியில் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய சிடிஆர் நிர்மல்குமார், “கரூர் சம்பவம் குறித்து சிபிஐயிடம் உரிய விளக்கம் அளித்தோம். விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ நடத்திய விசாரணை தொடர்பாக பல தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படும் என சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன. விஜய் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக எந்த சம்மனும் வழங்கப்படவில்லை” என்றார்.

-