"திமுக மோசமான நிலைக்கு செல்லும்"- நிர்மல்குமார்
திமுகவுடன் சேர நினைக்கும் அதிமுகவிலிருந்து துணிச்சலாக அம்மாவுக்கு எதிராக இருக்க மாட்டேன் என வெளியேறியவர் மரகதம் குமரவேல் என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், “அதே முட்டுச்சந்து.. அதிமுகவை விட மோசமான நிலைக்கு திமுகவை கொண்டுபோய் நிறுத்துவாங்க. 1994ல் நடக்க வேண்டியது. மூப்பனார் உள்ளிட்டோர் 1996ல் வாழ்க்கை கொடுத்து காப்பாத்தி விட்டாங்க... இன்னைக்கு அது நடக்காது. புரட்சித் தலைவர் தன் சொந்த காசில் கட்டிய தலைமை அலுவலகத்துக்குள் போக எடப்பாடிக்கு அருகதை கிடையாது. உண்மையான தொண்டர்கள் அவரை உள்ள விடாதீங்க. தமிழகம் சந்தித்ததே இல்லை,இது மாதிரியான இடைத்தேர்தலை தமிழகம் சந்தித்ததே இல்லை.
திமுகவுடன் சேர நினைக்கும் அதிமுகவிலிருந்நு துணிச்சலாக அம்மாவுக்கு எதிராக இருக்க மாட்டேன் என வெளியேறியவர் மரகதம் குமரவேல். நான் முன்பே அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடப்போகிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அந்த நிலைமையை நோக்கி 1994லேயே திமுகவைத் தள்ளியவர் வைகோ. அது ஒரு 60 சதவீதம் அன்று நடந்துவிட்டது; ஆனால், சில காரணங்களால் அது முழுமையாக நடக்கவில்லை. இன்னும் இரண்டு வருடங்களில், அதிமுக இப்போது எப்படி இருக்கிறதோ அதைவிட மோசமான நிலைக்குத் திமுகவை ஸ்டாலினும், உதயநிதியும் கொண்டு போய் நிறுத்துவார்கள். இன்னும் 100 ஆண்டுகள் கூட்டணி ஆட்சிதான் நடக்கும். 2 ஆண்டுகளில் திமுகவை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள். திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றது” என்றார்.