"ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை"- நிர்மல்குமார்
ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மின்வாரியத்தின் முக்கியமான துறைகளில் இருந்த அனைத்து ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளன. ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து பெங்களூரு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்த பிறகு உரிய தகவல் அளிக்கப்படும். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன. ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை. ஹார்டு டிஸ்க்குகளில் உள்ள தரவுகளை சரிபார்க்கும் பணி நடந்துவருகிறது.
5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களின் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் காணவில்லை. எதனால் திருடப்பட்டன. அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? உள்ளிருக்கும் ஒரு சில பணியாளர்களே இதில் சம்பந்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதற்கான விசாரணையும் நடைபெறுகிறது. நிலக்கரி டெண்டர், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட மின்வாரியத்தின் பல்வேறு தரவுகளை சேகரித்து வருகிறோம்” என்றார்